Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கார்டினலின் அழுத்தங்கள் தொடர்பில் வெளிப்படுத்திய டிரான்

T

The Leader Desk

நவம்பர் 24, 2023 • 3:05 AM

கார்டினலின் அழுத்தங்கள் தொடர்பில் வெளிப்படுத்திய டிரான்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேவைப்படாதது போல் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நடந்துகொள்கிறார் என, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நாடாளுமன்றத்தில் நேற்று (23) தெரிவித்தார்.
  • விசாரணைகளின் விளைவாக, இந்தக் குற்றத்திற்குக் காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேர் இன்னும் விளக்கமறியலில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
  • கார்டினல் அவர்களும் ஏனைய தரப்பினரும், மீண்டும் இன, மத முரண்பாடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்பதையே இந்த உண்மைகள் எடுத்துக்காட்டுவதாகவே தாம் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • அத்துடன், மேலும் 5 ஆயிரம் பொலிஸாரை அடுத்த ஆண்டில் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

தேவைப்படாதது போல் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நடந்துகொள்கிறார் என, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நாடாளுமன்றத்தில் நேற்று (23) தெரிவித்தார்.

விசாரணைகளின் விளைவாக, இந்தக் குற்றத்திற்குக் காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேர் இன்னும் விளக்கமறியலில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழுத்தம் கொடுத்ததாகவும், அது ஏனென வினவிய போது, முஸ்லிம் என்ற காரணத்தினால் அவருக்கு நீதி அமைச்சு வழங்கக்கூடாது எனக் கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல்வேறு பௌத்த மதங்களை பின்பற்றும் பல்வேறு அதிகாரிகளுக்கு எதிராக, கார்டினல் அவர்களால் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கார்டினல் அவர்களும் ஏனைய தரப்பினரும், மீண்டும் இன, மத முரண்பாடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்பதையே இந்த உண்மைகள் எடுத்துக்காட்டுவதாகவே தாம் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரக் கட்டா போன்றவர்களுக்கு வரும் ஒவ்வொரு அழைப்பும் சரிபார்க்கப்படும் என்றும் தெரிவித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர், ஹரக் கட்டா போன்றவர்களின் அழைப்புகளை சரிபார்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியதாகவும் அவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும், பாதாள உலகக் குழுக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறை தயாரிக்கப்படும் எனவும் இது தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 118 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் கூறிய அமைச்சர், தகவல் அளிப்பவர்களின் இரகசியம் பேணப்படும் எனவும் அமைச்சர் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தின் போது இது குறித்து மாத்திரம் பாதுகாப்புப் படையினரும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கவனம் செலுத்திய வேளையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக்கோஷ்டித் தலைவர்கள் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், போராட்டத்தின் காரணமாகவே பாதாள உலகம் உருவாகியுள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டங்கள் காரணமாக நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்துள்ள பாதாளக்குழுக்களின் செயல்பாடுகளை குறைப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிரான் அலஸ் கூறியுள்ளார்.

அத்துடன், இவ்வாறாக போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை பொலிஸ் துறையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய டிரான் அலஸ், சுமார் இரண்டாயிரம் பொலிஸார் இந்த ஆண்டில் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், குறித்த வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் பணிகள் தற்போது படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேலும் 5 ஆயிரம் பொலிஸாரை அடுத்த ஆண்டில் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...