Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துசெய்ய விசேட ஆணைக்குழு வேண்டும்’

T

The Leader Desk

நவம்பர் 23, 2023 • 12:07 PM

‘ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துசெய்ய விசேட ஆணைக்குழு வேண்டும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரத்து செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
  • நாட்டை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்திய ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி பொதுமக்களின் கையெழுத்துகளைத் திரட்டும் வேலைத்திட்டம், புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (23) ஆரம்பிக்கப்பட்டது.
  • “அவர்களுக்கு மீண்டும் தேர்தல்களுக்கு முன்நிற்க முடியாதவாறும், வாக்குரிமையும் பிரயோகிக்க முடியாதவாறும் உரிமைகள் மறுக்கப்பட வேண்டும்.
  • “220 இலட்சம் மக்களும் வீதிக்கு இறங்கி இந்த மனுவில் கையொப்பமிட்டு,’ராஜபக்ஷர்களைப் பாதுகாக்காமல் அவர்களின் குடியுரிமைகளை சட்டப்பூர்வமாக இரத்து செய்’ என்று ஜனாதிபதியை கட்டாயப்படுத்த முன்வாருங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

இரத்து செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்திய ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி பொதுமக்களின் கையெழுத்துகளைத் திரட்டும் வேலைத்திட்டம், புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (23) ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டமானது, “நீதிக்கான மக்கள் ஆணையைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், “ஊழல் கும்பல் எடுத்த தவறான முடிவுகளால் நாடு வங்குரோத்தானதன் காரணமாக, 220 இலட்சம் மக்கள் மற்றும் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் சீரழிந்துள்ள நிலையில் அவர்கள் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள இந்த தீர்ப்பின் ஊடாக வழிவகுக்கப்படுகின்றது” என்றார்.

“இந்த கையொப்பத் திரட்டின் மூலம் ஒரு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டு அதன் மூலம் நாட்டின் உயர் சட்டத்தின் பிரகாரம், நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய அனைவரினதும் பிரஜா உரிமைகளை இல்லாதொழிக்க ஜனாதிபதியை நிர்ப்பந்திக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

“அவர்களுக்கு மீண்டும் தேர்தல்களுக்கு முன்நிற்க முடியாதவாறும், வாக்குரிமையும் பிரயோகிக்க முடியாதவாறும் உரிமைகள் மறுக்கப்பட வேண்டும்.

கிராமம் நகரமாக சென்று இலட்சக்கணக்கான கையெழுத்துக்களை திரட்டி, ஜனாதிபதி தொடர்ந்தும் ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவலரும் அடிமையுமல்லாது மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டியதை கட்டாயமாக்கும் செயற்பாடு இதனூடாக மேற்கொள்ளப்படுகின்றது.

“220 இலட்சம் மக்களும் வீதிக்கு இறங்கி இந்த மனுவில் கையொப்பமிட்டு,’ராஜபக்ஷர்களைப் பாதுகாக்காமல் அவர்களின் குடியுரிமைகளை சட்டப்பூர்வமாக இரத்து செய்’ என்று ஜனாதிபதியை கட்டாயப்படுத்த முன்வாருங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துசெய்ய விசேட ஆணைக்குழு வேண்டும்’ | Tamil Leader | We Lead the Nation