Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மாணவர்களுக்கு லன்ச்ஷீட் உண்ணச்செய்த அதிபருக்கு இடமாற்றம்

T

The Leader Desk

நவம்பர் 23, 2023 • 8:23 AM

மாணவர்களுக்கு லன்ச்ஷீட் உண்ணச்செய்த அதிபருக்கு இடமாற்றம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கண்டித்துள்ள அப்பாடசாலையின் அதிபர், அந்த லன்ச் ஷீட்களை அம்மாணவர்களையே உண்ணச் செய்வித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்நிலையில், ரம்புக்பிட்டிய மத்திய மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த அந்த அதிபரை, உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்துக்கு மாற்றியதாக, கல்வி அமைச்சர் இன்று (23) அறிவித்தார்.
  • குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 11ஆம் தர மாணவர்கள் குழுவொன்று, மதிய உணவை லன்ச் ஷீட்டில் சுற்றிக் கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
  • சம்பவத்திற்கு முகங்கொடுத்த ஏனைய ஐந்து மாணவர்களும் இன்று (23) பாடசாலைக்குச் சென்றுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர், இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

கண்டித்துள்ள அப்பாடசாலையின் அதிபர், அந்த லன்ச் ஷீட்களை அம்மாணவர்களையே உண்ணச் செய்வித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரம்புக்பிட்டிய மத்திய மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த அந்த அதிபரை, உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்துக்கு மாற்றியதாக, கல்வி அமைச்சர் இன்று (23) அறிவித்தார்.

நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சுற்றப்பட்ட மதிய உணவுத் தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை கட்டாயமாக உண்ணச் செய்வித்த அதிபர் தொடர்பான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், நேற்று மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டுள்ள கல்வி அமைச்சர், இவ்விடயம் தொடர்பான தகவல்களைப் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 11ஆம் தர மாணவர்கள் குழுவொன்று, மதிய உணவை லன்ச் ஷீட்டில் சுற்றிக் கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்பாடசாலை பொலித்தீன் அற்ற வலயமாக பராமரிக்கப்படுவதால், குறித்த மதிய உணவுத் தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு குறித்த மாணவர்களை அதிபர் வற்புறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான சம்பவத்திற்கு முகங்கொடுத்த இரண்டு பாடசாலை மாணவர்கள் நேற்று காலை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்ததாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த ஏனைய ஐந்து மாணவர்களும் இன்று (23) பாடசாலைக்குச் சென்றுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர், இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, பஸ்பாகே பிரதேச கல்விப் பணிப்பாளரினால் ஸ்தல விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விசாரணையின் வசதிக்காக சம்பந்தப்பட்ட அதிபரை இடமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...