Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சஜித்துக்கு ஜனாதிபதி உத்தரவாதம்

T

The Leader Desk

நவம்பர் 22, 2023 • 12:03 PM

சஜித்துக்கு ஜனாதிபதி உத்தரவாதம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் தான் விசாரணை நடத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்தக் கடிதங்கள் மூன்றையும் தன்னிடம் கையளிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத் தெரிவித்தார்.
  • நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடமும் இலங்கை கிரிக்கெட் சபையிடமும் ஜனாதிபதி உரிய விளக்கத்தைக் கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டார்.
  • நாடாளுமன்றில் இன்று (22) உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
  • “இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தொடர்பில் தான் விசாரணை நடத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்தக் கடிதங்கள் மூன்றையும் தன்னிடம் கையளிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அக்கடிதங்கள் மூன்றையும் தான் சபையில் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடமும் இலங்கை கிரிக்கெட் சபையிடமும் ஜனாதிபதி உரிய விளக்கத்தைக் கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றில் இன்று (22) உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

“இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எமது நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தில் காணப்படும் குழப்பங்களே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

“இதற்கு முன்னர் நாட்டில் நடைபெற்ற ஐ.சி.சி.யின் 5 கிரிக்கெட் தொடர்களும் இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவின் நிர்வாகத்தின் கீழ் தான் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், 2000ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், 2002ஆம் ஆண்டு செம்பியன் கிண்ணத் தொடர், 2006ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர், 2012ஆம் ஆண்டு டி- 20 தொடர் என்பன இடைக்கால கட்டுப்பாட்டுக் குழு நிர்வாகத்தின் கீழ் தான் நாட்டில் இடம்பெற்றன.

“எனவே, விளையாட்டுத் துறை அமைச்சரும் ஜனாதிபதியும் இதுதொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும். இலங்கை கிரிக்கெட் சபையிடமும், ஐ.சி.சியிடமும் இது தொடர்பான விளக்கத்தை கோர வேண்டும்.

“எப்படி இந்தத் தரப்பினர் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எமது நாட்டில் நடைபெறவிருந்த தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும்? அத்தோடு, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர், இதன் ஊடாக தேசத்துரோக செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் நன்கொடையாக வழங்கிய 55,000 டொலர் தொகை இன்னும் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை” எனவும்,  எதிர்க்கட்சி தலைவர் இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா 50,000 டொலர்களையும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் 5,000 டொலர்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பல்லேகல மற்றும் ஆர்.பிரேமதாச மைதானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவே இந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

குறித்த பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், விளையாட்டுத்துறை அமைச்சர் தலையிடுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சஜித்துக்கு ஜனாதிபதி உத்தரவாதம் | Tamil Leader | We Lead the Nation