Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: எத்தனை தூரம் வியாபித்துள்ளதென வெள்ளியன்று ஸ்கான் சோதனை

T

The Leader Desk

நவம்பர் 22, 2023 • 5:56 AM

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: எத்தனை தூரம் வியாபித்துள்ளதென வெள்ளியன்று ஸ்கான் சோதனை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் திகதி விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனையிடப்படவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
  • “தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும்.
  • எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை இடம்பெறும்.
எழுத்து அளவு:

24ஆம் திகதி விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனையிடப்படவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

நேற்று நடைபெற்றஅகழ்வுப் பணியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து இன்று (நேற்று) இரு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

“அந்த எலும்புக் கூடுகளின் உடற்பகுதியில் இருந்து துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சிதறல்கள், விடுதலைப் புலிகளின் இலக்கத்தகடு மற்றும் சயனைட் குப்பி ஆகியன கண்டெடுக்கப்பட்டன.

“தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும். எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை இடம்பெறும். “அதன்போது இந்த மனிதப் புதைகுழி எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது, எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவல்களை அறியமுடியும்.

“களனிப் பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரே குறித்த ஸ்கான் இயந்திரத்தைக் கொண்டு வருகின்றனர்” என்றார்.

JMO_Vasudeva.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...