Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘தமிழர்களை எரித்துக் கொன்ற ஜே.வி.பியினரும் பொருளாதாரக் கொலையாளிகள் பட்டியலில் இடம்பெற வேண்டும்’

T

The Leader Desk

நவம்பர் 22, 2023 • 4:48 AM

‘தமிழர்களை எரித்துக் கொன்ற ஜே.வி.பியினரும் பொருளாதாரக் கொலையாளிகள் பட்டியலில் இடம்பெற வேண்டும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழர்கள் எரித்துக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, ஒட்டுமொத்த இலங்கையையும் ஜே.வி.பியனர் அழித்தார்கள் என்றும் பொருளாதார கொலையாளிகள் எனக் கூறப்படும் பெயர்ப் பட்டியலில் இவர்களின் பெயர்களும் இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
  • அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “கடந்த 1971ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள உயிர்களை அழித்து நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களைக் கொன்று ஜே.வி.பியினர் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர்.
  • “கடந்த 1983ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் சகோதரத்துவம் காணப்பட்டது.
  • “13 இராணுவ படை வீரர்கள் உயிரிழந்த போது அவர்களின் சடலங்கள் இரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
எழுத்து அளவு:

தமிழர்கள் எரித்துக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, ஒட்டுமொத்த இலங்கையையும் ஜே.வி.பியனர் அழித்தார்கள் என்றும் பொருளாதார கொலையாளிகள் எனக் கூறப்படும் பெயர்ப் பட்டியலில் இவர்களின் பெயர்களும் இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கியமான தினம் ஒன்றில் கோவிலுக்கு சென்று திரும்பிய தமிழர்கள் இவ்வாறு எரிக்கப்பட்டதுடன், அவர்களுடைய வாகனங்களும் எரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“கடந்த 1971ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள உயிர்களை அழித்து நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களைக் கொன்று ஜே.வி.பியினர் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர். ஜேவிபியே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

“கடந்த 1983ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் சகோதரத்துவம் காணப்பட்டது. ஆச்சரியப்படும் வகையிலான பிணைப்பு காணப்பட்டது. எனினும், ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

“13 இராணுவ படை வீரர்கள் உயிரிழந்த போது அவர்களின் சடலங்கள் இரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

“இதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொரளை மயானத்தில் இரவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி  ஜே.ஆர்.ஜயவர்தன இதனை செய்தார்.

“இதன் காரணமாக மக்கள் ஆத்திரமடைந்ததை அடுத்து, இலங்கை முழுவதும் வாழ்ந்து வந்த அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

“இதனால் அந்த மனிதர்களுக்கும் எமக்கு இடையில் ஒரு குரோதம் உருவாக்கப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு போர் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

“ஒட்டுமொத்த நாட்டையும் இரத்த வெள்ளமாக மாற்றினார்கள். அன்றும் பொருளாதாரம் உடைக்கப்பட்டு இலங்கை மூடப்பட்டது.

“கடந்த 1983ஆம் ஆண்டில் நாடு முடக்கப்பட்டதுடன், 1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில், மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த நாட்டின் பொருளாதாரத்தை உடைத்தனர்.

“நெல் களஞ்சியத்தை எரித்து, பேருந்துகளை எரித்து, தொடருந்து தண்டவாளங்களை ஜே.வி.பியினர் அகற்றினார்கள். அனைத்து விடயங்களின் மூலமும் ஜே.வி.பி நாட்டின் பொருளாதாரத்தை உடைத்தது.

“ஒட்டுமொத்த இலங்கையையும் ஜே.வி.பி அழித்தார்கள். பொருளாதார கொலையாளிகள் எனக் கூறப்படும் பெயர் பட்டியலில் இவர்களின் பெயர்களும் இணைக்கப்பட வேண்டும்.

“இன்று குற்றமற்றவர்கள் போல் திரிகிறார்கள்.  ஜேவிபியினர் இரகசியமாகக் கூட பாவங்கள் இழைக்கவில்லை என்ற வகையில் இருக்கின்றார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...