Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நாடாளுமன்றத்தில் குழப்பம்; சஜித்துக்கு இடையூறு விளைவித்தவர்கள் குறித்து விசாரணை

T

The Leader Desk

நவம்பர் 21, 2023 • 6:17 AM

நாடாளுமன்றத்தில் குழப்பம்; சஜித்துக்கு இடையூறு விளைவித்தவர்கள் குறித்து விசாரணை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆளுங்கட்சி எம்.பி சனத் நிஷாந்த உள்ளிட்ட எம்.பிக்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
  • இதையடுத்து, கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
எழுத்து அளவு:

ஆளுங்கட்சி எம்.பி சனத் நிஷாந்த உள்ளிட்ட எம்.பிக்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இப்பிரச்சினை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 6.00 மணிக்கு வரவு செலவுத்திட்ட 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியில் உள்ள சிலர் ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சிலரும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் சிலரும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நாளை முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த நாட்களில் தொடர்ச்சியாக 19 நாட்களுக்கு வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.

குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான டிசம்பர் 13ஆம் திகதி, வரவு செலவுத் திட்டத்தின் 3ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இன்றைய சபை அமர்வில்  உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடத்தில் இருந்து எழுந்துச் சஜித் பிரேமதாஸவின் இடத்திற்குச் சென்று குழப்பம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

அதேசமயம், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த இடத்தில் ஒன்று திரண்டதுடன் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. அத்துடன் நாடாளுமன்ற சபை அமர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...