Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘ராஜபக்ஷர்கள் சூறையாடிய நிதியை மீளப் பிடுங்குங்கள்’

T

The Leader Desk

நவம்பர் 21, 2023 • 4:59 AM

‘ராஜபக்ஷர்கள் சூறையாடிய நிதியை மீளப் பிடுங்குங்கள்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தீர்ப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராட்டியுள்ளார்.
  • ஆனால், அவர்கள் நீதிமன்றத்தால் பெயரிடப்படவில்லை.
  • உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, 'பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்களில் ஒரு சிலரை நீதிமன்றம் பெயரிட்டிருந்தாலும், அவர்களுடன் தொடரபு; டைய பலர் குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள்.
எழுத்து அளவு:

தீர்ப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராட்டியுள்ளார்.

நீதிமன்றம் அடையாளம் காட்டிய கும்பலினால் தவறாகக் கையாளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு அல்லது அவர்களின் சட்டவிரோத சொத்துக்களை கைப்பற்றி இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்த அதனைப் பயன்படுத்துவதற்கு தற்போதைய அரசு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி செயல்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உட்பட அவர்களது அரசின் பல அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் போன்றோர்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படப் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, 'பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்களில் ஒரு சிலரை நீதிமன்றம் பெயரிட்டிருந்தாலும், அவர்களுடன் தொடரபு; டைய பலர் குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் நீதிமன்றத்தால் பெயரிடப்படவில்லை.

இது, நாட்டின் வருங்காலத் தலைவர்களுக்கும் ஒரு கரும் புள்ளியாகும். மேலும், எதிர்காலச் சந்ததியினர் ஒரு தேசத்தை எவ்வாறு சரியாக ஆள்வது மற்றும் நாட்டின் பிரஜைகள் சுயலாபத்துக்கு அல்லாமல் தேசத்துக்காக உழைத்து தலைவர்களாக உயர வேண்டும் என்பதை இதன் மூலம் படிப்பினையாக உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘ராஜபக்ஷர்கள் சூறையாடிய நிதியை மீளப் பிடுங்குங்கள்’ | Tamil Leader | We Lead the Nation