Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘குடியுரிமை பிரச்சினை எழுந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’

T

The Leader Desk

நவம்பர் 20, 2023 • 1:22 PM

‘குடியுரிமை பிரச்சினை எழுந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதிமன்றுக்குச் சென்றால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
  • ஆனால், இந்தத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத மஹிந்த ராஜபக்ஷ, நல்லாட்சி அரசில் இருந்த தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியினரே நாட்டைச் சீரழித்தவர்கள் என்று வெட்கம் இல்லாமல் கூறியுள்ளார்.
  • பெல்லன்வில ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வுகளை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குடியுரிமையை பறிக்குமாறு கூறப்பட்டாலும் இதுவரை அவ்வாறனதொரு விடயம் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

நீதிமன்றுக்குச் சென்றால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வுகளை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குடியுரிமையை பறிக்குமாறு கூறப்பட்டாலும் இதுவரை அவ்வாறனதொரு விடயம் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை இறுதி முடிவுகள் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டாலோ அல்லது அவற்றையும் மீறி குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றத்திற்குச் சென்றாலோ, அங்கு நிச்சயம் போராடுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்த ராஜபக்ஷர்களையும் அவர்களின் சகாக்களையும் தூக்கிலிட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

“நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டைச் சீரழித்தவர்கள் ராஜபக்ஷர்கள் என்று உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது.

“இதை நாம் வரவேற்கின்றோம். ஆனால், இந்தத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத மஹிந்த ராஜபக்ஷ, நல்லாட்சி அரசில் இருந்த தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியினரே நாட்டைச் சீரழித்தவர்கள் என்று வெட்கம் இல்லாமல் கூறியுள்ளார்.

“நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணமானவர்கள் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய ராஜபக்ஷர்களினதும் அவர்களின் சகாக்களினதும் குடியுரிமையைப் பறிக்க வேண்டும்.

“அவர்களிடமிருந்து நட்டஈடு பெற வேண்டும். அவர்கள் திருடிய பணம் தற்போதும் அவர்களிடமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“அத்துடன் அவர்களைச் சும்மாவிட முடியாது. அவர்களைக் கூண்டோடு தூக்கிலிட வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...