Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘கட்சி மாறவோ, எதிர்க்கட்சியில் அமரவோ எனக்கு எண்ணமில்லை’

T

The Leader Desk

நவம்பர் 20, 2023 • 3:35 AM

‘கட்சி மாறவோ, எதிர்க்கட்சியில் அமரவோ எனக்கு எண்ணமில்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமருவதோ எனக்கு எண்ணம் இல்லை.
  • “நாங்கள் உங்கள் பின்னால் வரலாம், அல்லது நீங்கள் எங்களிடம் வரலாம்' என்று ஷம்மியும் சுதாத்தும் ஒருவித அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
  • “முன்னதாக நவம்பர் 6, 7 மற்றும் 9ஆம் திகதிகளில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு நிர்வாகக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் மூன்று கடிதங்களை அனுப்பியதன் மூலம் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் சர்வதேச கிரிக்கெட் அதிகாரிகளை தவறாக வழிநடத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

அமருவதோ எனக்கு எண்ணம் இல்லை. தேசிய விளையாட்டு சங்கங்களில் ஊழலை தடுப்பதே தனது ஒரே நோக்கம்” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனத பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்பு படையினரிடமும் விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் தேசிய விளையாட்டு சபையின் பணிப்பாளர் சுதத் சந்திரசேகர ஆகிய இரு தரப்பினரிடம் இருந்து தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“இந்த அச்சுறுத்தல்கள் குறித்து தாம் குற்றப்புலனாய்வுத் துறையில் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளேன். இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

“நாங்கள் உங்கள் பின்னால் வரலாம், அல்லது நீங்கள் எங்களிடம் வரலாம்' என்று ஷம்மியும் சுதாத்தும் ஒருவித அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

“முன்னதாக நவம்பர் 6, 7 மற்றும் 9ஆம் திகதிகளில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு நிர்வாகக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் மூன்று கடிதங்களை அனுப்பியதன் மூலம் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் சர்வதேச கிரிக்கெட் அதிகாரிகளை தவறாக வழிநடத்தியுள்ளார்.

“இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப் பெரிய கருப்பு புள்ளியும், கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய துரோகமுமாகும்.

“கிரிக்கெட் திருடர்களை சிக்க வைக்க நாடாளுமன்றம் கோப் குழுவை நியமித்தது. ஆனால், தற்போது கோப் குழு துரோகிகளின் பிடியில் சிக்கி சினிமா காட்சியாகி விட்டது போல் தெரிகிறது.

“தம்மை பதவி விலகுமாறு எவரிடமிருந்தும் தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கவில்லை. கட்சி மாறுவதோ அல்லது எதிர்க்கட்சியில் அமருவதோ தமக்கு எண்ணம் இல்லை. தேசிய விளையாட்டு சங்கங்களில் ஊழலை தடுப்பதே தனது ஒரே நோக்கம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...