Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கை, இந்திய உயர்மட்ட அழுத்தம்: கைதான தமிழக மீனவர்கள் கைது

T

The Leader Desk

நவம்பர் 19, 2023 • 5:15 AM

இலங்கை, இந்திய உயர்மட்ட அழுத்தம்: கைதான தமிழக மீனவர்கள் கைது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயர்மட்ட அழுத்தத்தினால் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டனர்.
  • பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்று மதியம் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன.
  • இந்நிலையில் 22 இந்திய கடற்தொழிலாளர்களும் அவர்களது இரண்டு படகில் இன்று அதிகாலை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • குறித்த சம்பவம் வடபகுதி கடற்தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்து அளவு:

உயர்மட்ட அழுத்தத்தினால் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டனர்.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்று மதியம் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்தனர்.

அதனையடுத்து, இன்று இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்தொழிலாளர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை கடற்படைக்கு இலங்கை அரசாங்க உயர்மட்டத்தில் இருந்து உத்தரவு பறந்தது.

இந்நிலையில் 22 இந்திய கடற்தொழிலாளர்களும் அவர்களது இரண்டு படகில் இன்று அதிகாலை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் வடபகுதி கடற்தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எமது வளத்தை அழித்து கொள்ளையிட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்யாது இந்திய அரசாங்கத்தின் உத்தரவுக்கு பணிந்து இலங்கை அரசாங்கம் இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

நேற்று தமிழகத்தின் இராமேஸ்வரத்திற்கு இரு நாள் பயணமாக இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற நிலையில் இந்திய கடற்தொழிலாளர் பிரதிநிதிகள் நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கைதான தமது உறவுகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததோடு தமது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியதாக இந்திய தகவல்கள் தெரிவித்தன.

fish_3.jpg

fish_1.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...