Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் குஷ்புவின் யாழ். விஜயம் இரத்து

T

The Leader Desk

நவம்பர் 19, 2023 • 4:55 AM

ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் குஷ்புவின் யாழ். விஜயம் இரத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாழ்ப்பாணம் வர இருந்த நிலையில், ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவரது வருகை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
  • இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகைதர இருந்த நிலையில் எதிர்ப்புக்கள் காரணமாக அவரது வருகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
  • தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக குஷ்புவுக்கு யாழில் எழுந்த கடும் எதிர்ப்புக்கள் காரணமாகவே தென்னிந்திய நடிகை குஷ்புவின் யாழ்ப்பாண விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

யாழ்ப்பாணம் வர இருந்த நிலையில், ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவரது வருகை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக குஷ்புவுக்கு யாழில் எழுந்த கடும் எதிர்ப்புக்கள் காரணமாகவே தென்னிந்திய நடிகை குஷ்புவின் யாழ்ப்பாண விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நடிகை குஷ்புவின் கருத்துக்கு வடக்கு கிழக்கு தமிழ் தாயகப் பகுதியில் கடும் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகைதர இருந்த நிலையில் எதிர்ப்புக்கள் காரணமாக அவரது வருகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நடிகை குஷ்புவிற்கு பதிலாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வருகைத் தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் நடிகை குஷ்பு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறிவினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன் அவருக்கு எதிராக எதிர்ப்புக்கள் மேலும் வலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...