Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நினைவேந்தலுக்கு தடை விதிக்க மட்டக்களப்பு நீதிமன்றம் மறுப்பு

T

The Leader Desk

நவம்பர் 17, 2023 • 2:14 PM

நினைவேந்தலுக்கு தடை விதிக்க மட்டக்களப்பு நீதிமன்றம் மறுப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரமுகர்களுக்குத் தடை உத்தரவு வழங்கவும் கோரிக்கை விடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் சமர்ப்பித்த விண்ணப்பங்களை நீதிமன்றம் இன்றுநிராகரித்துக் கட்டளை வழங்கியது.
  • அதையடுத்து பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரிக்கும் கட்டளையை நீதிவான் வழங்கினார்.
  • ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்படி பிரமுகர்கள் அனைவர் சார்பிலும் மட்டக்களப்பு சட்டத்தரணிகளில் பெரும் எண்ணிக்கையானோரின் அனுசரணையுடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி நடத்திய நீண்ட சட்டவாதத்தை அடுத்தே இந்த நிராகரிப்புக் கட்டளையை நீதிவான் வழங்கினார்.
எழுத்து அளவு:

இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரமுகர்களுக்குத் தடை உத்தரவு வழங்கவும் கோரிக்கை விடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் சமர்ப்பித்த விண்ணப்பங்களை நீதிமன்றம் இன்றுநிராகரித்துக் கட்டளை வழங்கியது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்படி பிரமுகர்கள் அனைவர் சார்பிலும் மட்டக்களப்பு சட்டத்தரணிகளில் பெரும் எண்ணிக்கையானோரின் அனுசரணையுடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி நடத்திய நீண்ட சட்டவாதத்தை அடுத்தே இந்த நிராகரிப்புக் கட்டளையை நீதிவான் வழங்கினார்.

“உயிரிழந்த ஒருவருக்காக நினைவேந்தும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. அது அடிப்படை உரிமையும் கூட. அதை மறுக்கும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் துணை போகக்கூடாது. மாறாக, அந்த உரிமை நிலை நாட்டப்படுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என்று சாரப்பட நீண்ட சட்டவாதத்தை சுமந்திரன் நிகழ்த்தினார்.

அதையடுத்து பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரிக்கும் கட்டளையை நீதிவான் வழங்கினார்.

வேறு ஒரு வழக்குக்காக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் சுமந்திரன் பிரசன்னமாகி இருந்த தருணத்திலேயே பொலிஸாரின் இந்த விண்ணப்பங்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

விடயத்தை அவதானித்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தானாக எழுந்து தடை விதிக்கக் கோரப்பட்ட பிரமுகர்கள் சார்பில் தாம் முன்னிலையாகிப் பதில் வாதம் செய்ய விரும்புகின்றார் என விண்ணப்பம் செய்தார்.

அச்சமயம் மன்றில் பிரசன்னமாகியிருந்த பெரும் எண்ணிக்கையான தமிழ்ச் சட்டத்தரணி கள் தாங்களும் சுமந்திரனுக்கு அனுசரணையாகப் பிரசன்னமாகின்றனர் எனப் பதிவு செய்தனர்.

மட்டக்களப்பு பொலிஸாரின் விண்ணப்பம் முதலில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதையடுத்து கொக்கட்டிசோலை பொலிஸாரின் விண்ணப்பம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னைய வழக்கின் காரணங்களின் அடிப்படையில் இந்த விண்ணப்பமும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

நன்றி: முரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நினைவேந்தலுக்கு தடை விதிக்க மட்டக்களப்பு நீதிமன்றம் மறுப்பு | Tamil Leader | We Lead the Nation