Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடி பற்றி ஜெய் ஷாவுடன் பேசிய ஜனாதிபதி

T

The Leader Desk

நவம்பர் 17, 2023 • 12:54 PM

இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடி பற்றி ஜெய் ஷாவுடன் பேசிய ஜனாதிபதி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஷாவுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
  • அத்துடன், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு முழு நாடாளுமன்றமும் ஒன்றிணைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இன்றைய நாடளுமன்ற அமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஷாவுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இன்றைய நாடளுமன்ற அமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவின் தந்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி கிரிக்கெட் பிரச்சனையை அரசியல் பிரச்சினையாக்க முயற்சிக்கிக்கக் கூடாதென கூறியுள்ளார்.

அத்துடன், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு முழு நாடாளுமன்றமும் ஒன்றிணைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிப்பது சிறந்தது என பலர் தெரிவித்தாலும் அது அடுத்த தலைமுறையினரை பாரியளவில் பாதிக்குமென கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க யாரும் முயற்சிக்க கூடாதென அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக பிரச்சனைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையை குற்றம் சாட்ட முடியாதெனவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடி பற்றி ஜெய் ஷாவுடன் பேசிய ஜனாதிபதி | Tamil Leader | We Lead the Nation