Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஐசிசி நிர்வாகசபைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் விசேட ஆராய்வு

T

The Leader Desk

நவம்பர் 17, 2023 • 12:28 PM

ஐசிசி நிர்வாகசபைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் விசேட ஆராய்வு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்களுக்குப் பின்னர், அதாவது எதிர்வரும் 21ஆம் திகதி ஐசிசியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.
  • மேலும் 2028ஆம் ஆண்டு லொஸ்ஏஞ்ஜல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்தும் இங்கு விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
  • ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை இலங்கை தொடர்ந்து நடத்துமா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நாட்களுக்குப் பின்னர், அதாவது எதிர்வரும் 21ஆம் திகதி ஐசிசியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விடயங்கள் குறித்தும் கிரிக்இன்ஃபோ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை கிரிக்கெட்டின் இடைநிறுத்தம், ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் மற்றும் ஐ.சி.சி முழு அங்கத்துவ நாடுகளை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சிகள் பற்றிய கலந்துரையாடல் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 2028ஆம் ஆண்டு லொஸ்ஏஞ்ஜல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்தும் இங்கு விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த வாரம் விதிக்கப்பட்ட தடை விவகாரம் ஐசிசி கூட்டத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை இலங்கை தொடர்ந்து நடத்துமா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இராஜாங்க அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமித்தார். அமைச்சர்களான டிரான் அலஸ், மனுஷ நாணாயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அதற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களை புறந்தள்ளி அனைவரும் நாடாளுமன்றத்தில் செயற்பட வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...