Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியிடம் கருத்துக் கோரல்: பிரமோத்யவை சிஐடீ விசாரணைக்கு அழைப்பு

T

The Leader Desk

நவம்பர் 17, 2023 • 11:57 AM

இலங்கை கிரிக்கெட் அணியிடம் கருத்துக் கோரல்: பிரமோத்யவை சிஐடீ விசாரணைக்கு அழைப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தக் கலந்துரையாடலில், தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு அதிகாரிகள் மற்றும் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
  • இலங்கை தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருந்தன.
  • இதன்படி, கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி விளையாட்டு தொடர்பான தவறுகளை தடுக்கும் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

இந்தக் கலந்துரையாடலில், தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு அதிகாரிகள் மற்றும் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, இலங்கைக் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் இலங்கைக் கிரிக்கெட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் தொடர்பில், வீரர்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, விளையாட்டு தொடர்பான குற்றங்கள் தடுப்பு சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு, இலங்கைக் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் குழுவின் தலைவர் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்திருந்ததை அடுத்தே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருந்தன.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டவர்கள் கிரிக்கெட் விளையாட்டை அழிக்க முயன்றதாகவும், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வதற்காக சிலர் பெரும் தொகையை முதலீடு செய்ததாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரமோத்ய விக்ரமசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, மேட்ச் பிக்சிங், ஊழல், சட்டவிரோத அறிவுறுத்தல்கள் மற்றும் சட்டவிரோத பந்தயம் தொடர்பான விடயங்கள் குறித்து தனக்கு தெரியும் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பாரதூரமானது என விளையாட்டு அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், அந்த அறிக்கை தொடர்பில் முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்திருந்தார்.

இதன்படி, கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி விளையாட்டு தொடர்பான தவறுகளை தடுக்கும் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...