Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வழங்கும் நிவாரணம் தென்னிலங்கைக்கும் வேண்டும்’

T

The Leader Desk

நவம்பர் 17, 2023 • 3:35 AM

‘வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வழங்கும் நிவாரணம் தென்னிலங்கைக்கும் வேண்டும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தென்னிலங்கைக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
  • பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • காணாமல் போனோருக்கு நட்டஈடு வழங்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஏனெனில் 1987 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்களினால் தென்னிலங்கையில் பலர் காணாமல் போயுள்ளார்கள்.
எழுத்து அளவு:

தென்னிலங்கைக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறான நிலையில் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்தவர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கற்பனை உலகை வரையறுத்ததாக காணப்படுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளன.

அரச வருமானத்தையும் தேசிய உற்பத்திகளையும் மேம்படுத்த எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை. போலியான வாக்குறுதிகள் மாத்திரம் மிதமிஞ்சியுள்ளன.

காணாமல் போனோருக்கு நட்டஈடு வழங்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோரது உறவுகளுக்கு நட்டஈடு அல்லது இழப்பீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தெற்கு மாகாணத்துக்கும் வழங்கப்பட வேண்டும்.

ஏனெனில் 1987 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்களினால் தென்னிலங்கையில் பலர் காணாமல் போயுள்ளார்கள்.

ஆகவே தென்னிலங்கையிலும் காணாமல் போனோரது உறவுகள் இன்றும் உள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார பாதிப்பை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருப்பதை போன்று தொழிற்சங்கங்களும்  அறியாமல் இருப்பது கவலைக்குரியது.

தற்போதைய நிலையில் 20 ஆயிரம் ரூபா சம்பள  அதிகரிப்பு கோரி  போராட்டத்தில் ஈடுபடுவது முறையற்றது.

இவர்களின் கோரிக்கைக்கு அமைய நாணயம் அச்சிட்டு சம்பளம் அதிகரித்தால் அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ஆகவே அரச வருமானத்தை அதிகரிக்கவும், வரி செலுத்தாமல் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வழங்கும் நிவாரணம் தென்னிலங்கைக்கும் வேண்டும்’ | Tamil Leader | We Lead the Nation