Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கிரிக்கெட் சபை விசாரணை: புதிய சர்ச்சையில் கோப் குழு தலைவர்

T

The Leader Desk

நவம்பர் 16, 2023 • 1:24 PM

கிரிக்கெட் சபை விசாரணை: புதிய சர்ச்சையில் கோப் குழு தலைவர்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அக்குழுவின் கடைசி கூட்டத்தில் பிரசன்னமானது தவறு என சுட்டிக்காட்டிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படும் என உறுதியளித்துள்ளார்.
  • எதிர்வரும் நாட்களில் கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் கோப் குழு மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால விசாரணைகளுக்கு பேராசிரியர் பண்டார தலைமை தாங்க அனுமதிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
  • "நவம்பர் 24, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் கோப் குழு கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
எழுத்து அளவு:

அக்குழுவின் கடைசி கூட்டத்தில் பிரசன்னமானது தவறு என சுட்டிக்காட்டிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படும் என உறுதியளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரஞ்சித் பண்டாரவின் மகன் எவ்வாறு கோப் குழுவில் பங்குபற்றினார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கிரிக்கெட் சபை மீதான விசாரணை குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பொது நிறுவனங்களுக்கான விசாரணை குழுவின் (கோப்) சில உறுப்பினர்களும் அதன் தலைவர் ரஞ்சித் பண்டாரவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீதான விசாரணையை தவறாக கையாண்டதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதால் இலங்கையின் கிரிக்கெட் தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையின் கிரிக்கெட் சபை மீதான விசாரணை முடியும் வரை பேராசிரியர் பண்டார குழுவின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட வேண்டும் என சில கோப் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் “கோப் தலைவர், கை சமிக்ஞைகளைப் பயன்படுத்தி, கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

அதேவேளை, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் காணொளிகளில் இது தெளிவாகத் தெரியும்” என்று சஜித் பிரேமதாச குற்றச்சாட்டொன்றை நாடாளுமன்றில் முன்வைத்தார்.

எதிர்வரும் நாட்களில் கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் கோப் குழு மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால விசாரணைகளுக்கு பேராசிரியர் பண்டார தலைமை தாங்க அனுமதிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

"நவம்பர் 24, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் கோப் குழு கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பேராசிரியர் பண்டாரவை தற்காலிகமாக நீக்கிவிட்டு, வேறொரு தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பேராசியர் பண்டாரவை தலைமை தாங்கும் கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான எந்தவொரு விசாரணையிலும் தானும் கோப் குழுவின் சில உறுப்பினர்களும் பங்கேற்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொல்லவத்தவும் கோப் தலைவரை தற்காலிகமாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த பேராசிரியர் பண்டார, விசாரணையை அரசியலாக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“கோப் முடிந்தவரை சுதந்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், கிரிக்கெட் சபை மீதான விசாரணையை அரசியலாக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களால் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

“பல உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பேசுவதால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி நான் என் உதடுகளில் விரல்களை வைத்து கேட்டுக் கொண்டேன்" என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கை கிரிக்கெட் மீதான விசாரணைகளில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதோடு, சரியான தீர்வு நிலை குறித்து விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கேள்விகளும் எழுந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...