Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பரதக் கலையை கொச்சைப்படுத்திய மௌலவி: மாணவர்கள் போராட்டம்; பொலிஸிலும் முறைப்பாடு

T

The Leader Desk

நவம்பர் 16, 2023 • 1:12 PM

பரதக் கலையை கொச்சைப்படுத்திய மௌலவி: மாணவர்கள் போராட்டம்; பொலிஸிலும் முறைப்பாடு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
  • இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன் இடம்பெற்றது.
  • இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
  • “பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும்.
எழுத்து அளவு:

கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

"பரதக்கலை" சம்மந்தமாக இஸ்லாமிய மௌலவி ஒருவரின் சர்ச்சைக்குரிய மேடைப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், கையில் பதாகையுடன் எதிர்ப்பு கோசங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். அதனை தெய்வீக கலையாக நாங்கள் கடந்துவரும் நிலையில் அதனை கீழ்த்தரமான கலையாக விமர்சனம் செய்த குறித்த மௌலவிக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அவரின் கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக பரதநாட்டியம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மௌலவிக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையில் ஆசிரியர்கள் நடனமாடியமை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட மௌலவி அப்துல் ஹமீட், பரதநாட்டியம் தொடர்பாகவும் தமிழ் மக்களது கலை மரபு தொடர்பாகவும் அவதூறாக பேசியுள்ளதுடன், ஒரு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், ஆசிரியர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் பல்வேறு தரப்புக்களில் இருந்தும் குறித்த மௌலவிக்கு எதிராக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருவதுடன், சமூக வலைத்தளங்களிலும் மெளலவிக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த மௌலவியின் கருத்து சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுடன், இது தொடர்டபில் நடவடிக்கை எடுக்குமாறும் பௌத்த இந்து சங்கத்தின் தலைவர் ம.மயூரதனால் இன்று வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

baratha_2.jpg

baratha_3.jpg

 

baratha_4.jpgbaratha_5.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...