Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

உலகக் கிண்ண போட்டி பார்க்க நண்பர்கள், குடும்பத்தினருடன் சென்ற ஷம்மி

T

The Leader Desk

நவம்பர் 15, 2023 • 5:34 PM

உலகக் கிண்ண போட்டி பார்க்க நண்பர்கள், குடும்பத்தினருடன் சென்ற ஷம்மி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர்கள் உட்பட பலரை அழைத்துச் சென்றதை இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா ஒப்புக்கொண்டுள்ளார்.
  • இதேவேளை, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினர் கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, எதிர்வரும் 23ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
எழுத்து அளவு:

உறுப்பினர்கள் உட்பட பலரை அழைத்துச் சென்றதை இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா ஒப்புக்கொண்டுள்ளார்.

கோப் குழு முன்பாக இலங்கை கிரிக்கெட் சபை அழைக்கப்பட்டபோது கேள்விகளுக்கு பதிலளித்த ஷம்மி சில்வா, கடந்த ஆண்டு அவுரேலியாவில் நடைபெற்ற போட்டியை காண குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர திஸாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினர் கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்றைய தினம் கோப் குழுவில் ஏற்கனவே முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...