Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘பொருளாதார நெருக்கடிக்கான உண்மை காரணம் ஆழமாக ஆராயப்பட வேண்டும்’

T

The Leader Desk

நவம்பர் 15, 2023 • 5:06 PM

‘பொருளாதார நெருக்கடிக்கான உண்மை காரணம் ஆழமாக ஆராயப்பட வேண்டும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜபக்ச குடும்பத்தினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
  • அத்துடன், குறித்த வழக்கு விசாரணைகளின் போது சாட்சிகள் நீதிமன்றில் முன்னிலையாக தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகளின் போது, எழுத்து மூல சாட்சிகள் மாத்திரம் பரிசீலிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜபக்ச குடும்பத்தினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகளின் போது, எழுத்து மூல சாட்சிகள் மாத்திரம் பரிசீலிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த வழக்கு விசாரணைகளின் போது சாட்சிகள் நீதிமன்றில் முன்னிலையாக தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ சகோதரர்களும் அவரது சகாக்களுமே காரணம் என நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிக்கான உண்மையான காரணம் தொடர்பில் ஆழமாக ஆராயப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். 

அத்துடன், இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சிறந்த இடம் நாடாளுமன்றம் எனவும் குறித்த விடயம் நாடாளுமன்ற  விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   

சட்டங்களை நிறைவேற்றுவது, அவற்றை ஆராய்வது உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்னெடக்கப்படும் நிலையில், பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களும் நாடாளுமன்றத்தின் மூலம் ஆராயப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கலாமெனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘பொருளாதார நெருக்கடிக்கான உண்மை காரணம் ஆழமாக ஆராயப்பட வேண்டும்’ | Tamil Leader | We Lead the Nation