Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வயோதிபர் தூக்கிட்டு தற்கொலை

T

The Leader Desk

நவம்பர் 15, 2023 • 2:18 AM

வயோதிபர் தூக்கிட்டு தற்கொலை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முந்தல் - பள்ளிவாசல்பாடு பகுதியைச் சேர்ந்த 60 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
  • சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
  • தனிமையில் வாழ்ந்து வந்த வயோதிப தம்பதிகளான கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்தே, குறித்த நபர் வீட்டின் சமயலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

செய்துகொண்டுள்ளார்.

முந்தல் - பள்ளிவாசல்பாடு பகுதியைச் சேர்ந்த 60 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தனிமையில் வாழ்ந்து வந்த வயோதிப தம்பதிகளான கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்தே, குறித்த நபர் வீட்டின் சமயலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் நீண்ட காலமாக சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்தவர் எனவும், அவரது மனைவி கண்பார்வை குறைந்தவர் எனவும் சொல்லப்படுகிறது.

குறித்த வயோதிப தம்பதிக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் கைகலப்பில், உயிரிழந்த நபரின் மனைவியான வயோதிப பெண் இரத்தக் காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு இன்று மாலை விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால் , நீதிவான் விசாரணையை மேற்கொண்ட பின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த வயோதிபரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...