Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘பெருந்தோட்ட மக்களுக்கான திட்டங்களை அமுல்படுத்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத் தயார்’

T

The Leader Desk

நவம்பர் 14, 2023 • 5:49 AM

‘பெருந்தோட்ட மக்களுக்கான திட்டங்களை அமுல்படுத்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத் தயார்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளதை வரவேற்கின்றோம்.
  • இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
  • “மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024இல் ஆரம்பிக்கப்படும்.
  • அதற்காக 2024ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என பாதீட்டு உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளதை வரவேற்கின்றோம். இப்பாதீட்டில் உள்ள முன்மொழிவுகளை அமுலாக்க முழு ஆதரவு வழங்கப்படும்” என்று, தோட்ட உட்கட்டமைப்ப அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

“மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என பாதீட்டு உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“மத்திய மாகாணத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்பான விவரத்தையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

“நுவரெலியாவின் பாரிய அபிவிருத்தி திட்டத்தின் ஓர் அங்கமாக நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்படவுள்ளது.

“கொத்மலையில் அமையவுள்ள காலநிலை தொடர்பான பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நுவரெலியா மாவட்டத்தில் விரைவில் இரண்டு பல்கலைக்கழகங்கள் வரவுள்ளன.

“அதேபோல இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இவ்வாறான புதிய பல்கலைக்கழகங்கள் மூலம் மத்திய மாகாணம் உயர் கல்வி மையமாக மாறும். இதன்மூலம் மலையக இளைஞர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

“நெருக்கடி நிலையில் இருந்த நாட்டையும் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டெடுத்து வருகின்றார். நெருக்கடியான காலகட்டத்திலும் மக்களுக்கு பயன்தரக்கூடிய பல முன்மொழிகள் இடம்பெற்றுள்ளன.

“இந்நிலையில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கென சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளதை வரவேற்கின்றோம். இப்பாதீட்டில் உள்ள முன்மொழிவுகளை அமுலாக்க முழு ஆதரவு வழங்கப்படும்” என்று, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...