Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ரோமில் வைத்து இலங்கைக்கு மல்கம் ஆண்டகை அபாய எச்சரிக்கை

T

The Leader Desk

நவம்பர் 13, 2023 • 2:59 AM

ரோமில் வைத்து இலங்கைக்கு மல்கம் ஆண்டகை அபாய எச்சரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வத்திக்கானில் நடைபெற்ற Ad Limina Apostolorum என்னும் திருத்தந்தையுடனான ஆயர்கள் சந்திப்பை முன்னிட்டு ரோமுக்கு வருகைதந்த கொழும்பு பேராயர், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
  • நாட்டில் ஜனநாயக சூழலை உருவாக்கவும் சாதாரண நிலைமைகளை நடைமுறைப்படுத்தவும் கடுமையான இடையூறுகளை அனுபவித்து வருவதாகக் தெரிவித்துள்ள கர்தினால், பாதிக்கப்படும் கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இலங்கை நாட்டில் வாழும் மக்களையும் நினைவுகூர்வதாக எடுத்துரைத்துள்ளார்.
எழுத்து அளவு:

குற்றஞ்சாட்டுவதற்கான அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது எனவும், இதுபோன்ற பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் நீதி மற்றும் ஜனநாயகத்துக்கு உண்மையான ஆபத்தை விளைவிக்கக் கூடியவை எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் நடைபெற்ற Ad Limina Apostolorum என்னும் திருத்தந்தையுடனான ஆயர்கள் சந்திப்பை முன்னிட்டு ரோமுக்கு வருகைதந்த கொழும்பு பேராயர், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் இலங்கை அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் சூழலில், நாட்டின் நிலைமையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மக்களிடையே அமைதியற்ற சூழலையும் அதிருப்தியையும் உருவாக்கும் நோக்கத்தில் கடுமையான சமூகக் கட்டுப்பாட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்றும் பேராயர் கூறியுள்ளார்.

நாட்டில் ஜனநாயக சூழலை உருவாக்கவும் சாதாரண நிலைமைகளை நடைமுறைப்படுத்தவும் கடுமையான இடையூறுகளை அனுபவித்து வருவதாகக் தெரிவித்துள்ள கர்தினால், பாதிக்கப்படும் கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இலங்கை நாட்டில் வாழும் மக்களையும் நினைவுகூர்வதாக எடுத்துரைத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...