Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சீனி நிறுவனங்கள் தொடர்பில் வௌியான முக்கிய தகவல்

T

The Leader Desk

நவம்பர் 12, 2023 • 10:31 AM

சீனி நிறுவனங்கள் தொடர்பில் வௌியான முக்கிய தகவல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரூபாவிற்கும் அதிகமாக செலுத்திப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • அதன்படி, 2022ஆம் ஆண்டு செவனகல மற்றும் பெலவத்த சீனி நிறுவனங்களுக்கு கொடுப்பனவு மற்றும் ஊக்கத்தொகையாக எழுபத்து மூன்று கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து இருபத்தாயிரத்து நூற்றி இருபத்தைந்து ரூபா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • லங்கா சீனி தனியார் நிறுவனம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள வருடாந்த கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ரூபாவிற்கும் அதிகமாக செலுத்திப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா சீனி தனியார் நிறுவனம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள வருடாந்த கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2022ஆம் ஆண்டு செவனகல மற்றும் பெலவத்த சீனி நிறுவனங்களுக்கு கொடுப்பனவு மற்றும் ஊக்கத்தொகையாக எழுபத்து மூன்று கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து இருபத்தாயிரத்து நூற்றி இருபத்தைந்து ரூபா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செவனகல பிரிவு மற்றும் தலைமை அலுவலகத்திற்கான கொடுப்பனவு மற்றும் ஊக்கத்தொகையாக கடந்த வருடம் இருபத்தி இரண்டு கோடியே எண்பத்தேழு இலட்சத்து மூவாயிரத்து நூற்றி இருபத்தைந்து ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிடுகிறது.

அரச வர்த்தக சுற்றறிக்கையின் பிரகாரம் கடந்த வருடத்திற்கான கொடுப்பனவு தொகை இரண்டு கோடியே எண்பத்தி ஆறு லட்சம் ரூபாவாக காணப்பட்ட போதிலும், இருபது கோடியே ஒரு லட்சத்து மூவாயிரத்து நூற்றி இருபத்தைந்து ரூபாவிற்கும் அதிகளவான செலுத்தப்பட்டுள்ளமை கணக்காய்வில் தெரியவந்துள்ளது.

அரச வர்த்தக சுற்றறிக்கையின் பிரகாரம் பெலவத்தை துறைக்கு செலுத்தக்கூடிய ஊக்கத்தொகை எட்டு கோடி என்ற போதிலும் 50 கோடியே 80 இலட்சத்து 17 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளமை  தெரியவந்துள்ளது. 

இதன்படி 40 கோடியே 95 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் அதிகளவாக செலுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...