Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘ஜனாதிபதி செயலகத்தால் எனக்கு விஷம் கொடுக்கப்படும் என்று சந்தேகம்’

T

The Leader Desk

நவம்பர் 11, 2023 • 2:08 PM

‘ஜனாதிபதி செயலகத்தால்  எனக்கு விஷம் கொடுக்கப்படும் என்று சந்தேகம்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செயலகத்தினால் வழங்கப்படும் ஒரு சொட்டு நீரையேனும் அருந்த மாட்டேன்.
  • இதேவேளை, கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
  • அதிலும் அவர்கள் விஷம் கலந்திருப்பார்களோ என்று சந்தேகம்.
எழுத்து அளவு:

செயலகத்தினால் வழங்கப்படும் ஒரு சொட்டு நீரையேனும் அருந்த மாட்டேன். அதிலும் அவர்கள் விஷம் கலந்திருப்பார்களோ என்று சந்தேகம். என்னைக் கொல்ல முடியுமென்றால் கொல்வார்கள்” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரின் கோரிக்கைக்கு அமையவே சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளதாக ESPNcricinfo இணையதளம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும், நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்காலக் குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கினால், எதிர்வரும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆதரவை அர்ஜுன ரணதுங்கவுக்கு வழங்கப்படும்.

அத்துடன் சர்வதேச கிரிக்கட் பேரவை முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு உரிய முடிவு கிடைக்காவிட்டால் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...