Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு

T

The Leader Desk

நவம்பர் 9, 2023 • 6:23 PM

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
  • கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண் கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட நிலையில் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
  • எதிரிக்கு தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டதுடன் எதிரியின் இறுதிக் கருத்தும் கேட்டதை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

இன்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண் கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட நிலையில் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் வேலை செய்த மரணித்தவரின் காதலனான - எதிரியைக் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் மரணித்தவர் இறுதியாக வைத்திருந்த கைத்தொலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றுடன் கைது செய்து ஆஜர்படுத்தியிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இன்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரிக்கு தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டதுடன் எதிரியின் இறுதிக் கருத்தும் கேட்டதை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்றனர்.

நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...