Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் இன்று வாக்கெடுப்பு

T

The Leader Desk

நவம்பர் 9, 2023 • 5:28 AM

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் இன்று வாக்கெடுப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
  • ஊழல் மோசடி நிறைந்த இலங்கை கிரிக்கெட் சபையை கலைப்பதற்கு முழு நாடாளுமன்றமும் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பிரேரணை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • அதன் பிரகாரம் நேற்று புதன்கிழமை (08) அது தொடர்பில் சபையில் விவாதம் நடத்தி வாக்கெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையை கலைப்பது குறித்த யோசனை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு, விவாதம் இடம்பெறும்.

அதேவேளை, இன்று மாலை குறித்த யோசனை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஊழல் மோசடி நிறைந்த இலங்கை கிரிக்கெட் சபையை கலைப்பதற்கு முழு நாடாளுமன்றமும் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பிரேரணை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் நேற்று புதன்கிழமை (08) அது தொடர்பில் சபையில் விவாதம் நடத்தி வாக்கெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (08) விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகள் தொடர்பில் சபையில் நீண்ட விளக்கம் ஒன்றை முன்வைத்ததைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை இல்லாமலாக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையை உடனடியாக கலைக்க வேண்டும் என தெரிவித்து முழு நாடாளுமன்றமும் இணைந்து நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

குறித்த பிரேரணைக்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்தும் ஆளும் கட்சியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளவோம் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கையை சுமார் ஒரு மணி நேரம் வரை தற்காலிகமாக ஒத்திவைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

அதன் பிரகாரம் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, இன்று வியாழக்கிழமை (09) இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாக விவாதித்து, இலங்கை கிரிகெட் சபையை உடனடியாக கலைத்துவிடவும் இடைக்கால குழு கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லவும் பிரேரணை நிறைவேற்றி வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...