Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ரோஹினி எம்.பியை அவமதித்த அசோக்கவால் சபையில் பதற்றம்

T

The Leader Desk

நவம்பர் 8, 2023 • 2:38 PM

ரோஹினி எம்.பியை அவமதித்த அசோக்கவால் சபையில் பதற்றம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் குரல் எழுப்பியதால் இன்று (08) காலை நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
  • தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மேற்படி இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, சபையில் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தினர்.
எழுத்து அளவு:

அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் குரல் எழுப்பியதால் இன்று (08) காலை நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மேற்படி இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, சபையில் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தினர்.

இன்றைய அமர்வின் போது, ஓய்வூதியம் பெறுபவர்கள் தொடர்பில் ரோஹினி குமாரி எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, ஓய்வூதியம் பெறுபவர்களின் பிரச்சினைகளுக்கு பல்வேறு வகையில் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் இது விடயத்தில் ரோஹினி குமாரி எம்.பி திருப்தியடையவில்லை என்றும் அவரை திருப்திபடுத்தும் விதம் தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பதில், பெரும் அவமதிப்பை ஏற்படுத்துவதாக, எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, நலின் பண்டார மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் உரக்கத் தெரிவித்தனர்.

“ரோகினி குமாரி எம்.பிக்கு தவறு நேர்ந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாத வார்த்தைகளை நீக்க உத்தரவிட்டுள்ளேன். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகர் வந்ததும் ஒலி நாடாவைக் கையளித்து, நடவடிக்கை எடுக்கச் சொல்வேன். நாட்டில் உள்ள அனைவரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். எனவே இதனை அசிங்கப்படுத்தாதீர்கள்” என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

"வாபஸ் பெறவேண்டிய வார்த்தைகள் தொடர்பில் அவருக்கு நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். அவர் இவ்வாறான அவமான வார்த்தைகளை நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்தியுள்ளார்” என்று லக்ஷ்மன் கிரியெல்ல இதன்போது தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...