Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

'ஓரினம் அழிவதை பால்சோறு கொடுத்து தமிழர்கள் கொண்டாட மாட்டார்கள்'

T

The Leader Desk

நவம்பர் 8, 2023 • 8:46 AM

'ஓரினம் அழிவதை பால்சோறு கொடுத்து தமிழர்கள் கொண்டாட மாட்டார்கள்'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.
  • கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பலஸ்தீனுக்கு ஆதரவாக நேற்று (07) நடைபெற்ற Peace No War என்னும் தலைப்பில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • எம்மால் தமிழராக மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
  • “2009இலும் அதற்கு முந்திய காலத்திலும் எம் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.
எழுத்து அளவு:

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பலஸ்தீனுக்கு ஆதரவாக நேற்று (07) நடைபெற்ற Peace No War என்னும் தலைப்பில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “காசா சுடுகாடாக மாறுகிறது! வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக வைத்துக் கொள்ளவே பேரினவாதம் விரும்புகின்றது” என்றார்.

“சுடுகாடாக ஆக்கப்படும் நேரத்தில் மௌனம் காத்தவர்கள் பலர். எம்மால் தமிழராக மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அதன் வலியும் வேதனையும் எமக்குத் தெரியும்.

“2009இலும் அதற்கு முந்திய காலத்திலும் எம் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். வைத்தியசாலைகள், மத வழிபாட்டிடங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முகாம்கள் என குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்.

“ஓர் இனம் அழிவதை பால்சோறு கொடுத்து கொண்டாடும் மனோ நிலையில் எம் தமிழர் இனம் என்றும் இருக்க மாட்டார்கள்.
“எங்கு அநியாயம் நடக்கின்றதோ அங்கு எமது மக்களின் மற்றும் எனது குரல் ஒலிக்கும். கொல்லப்படுபவர்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தும் இலங்கை வாழ் மக்கள் எமது நாட்டில் கொல்லப்படவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராட வேண்டும்” என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...