Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு தடை உத்தரவு!

T

The Leader Desk

நவம்பர் 7, 2023 • 11:35 AM

கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு தடை உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிறுவனத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதன்படி, கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கும் இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பதற்கும் தடைவிதித்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
எழுத்து அளவு:

நிறுவனத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கும் இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பதற்கும் தடைவிதித்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன், அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க தலைமையிலான கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் பணியாற்றுவதைத் தடுத்து மற்றுமொரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு, மனுதாரர் மற்றும் இலங்கை கிரிக்கட் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில், நீதிமன்றம் மற்றுமொரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...