Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நீதிபதிகளின் சம்பளம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

T

The Leader Desk

நவம்பர் 6, 2023 • 2:10 AM

நீதிபதிகளின் சம்பளம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யப்பட்ட மூன்று மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமின் பெரும்பாலான நீதிபதிகளின் இணக்கத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  • இதன்படி, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, சோபித ராஜகருண, மேனகா விஜேசுந்தர, டி.என்.சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகிய ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் ஆராய்யப்பட்டன.
  • இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற தலைவர்கள் சங்கம் ஆகியன இது தொடர்பான மனுக்களை முன்வைத்திருந்தன.
எழுத்து அளவு:

செய்யப்பட்ட மூன்று மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமின் பெரும்பாலான நீதிபதிகளின் இணக்கத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற தலைவர்கள் சங்கம் ஆகியன இது தொடர்பான மனுக்களை முன்வைத்திருந்தன.

நீதித்துறை அதிகாரிகள் சுயாதீனமாக கடமையாற்றும் குழுவாக இருப்பதால், உள்நாட்டு வருவாய் சட்டத்தின்படி அவர்களது சம்பளத்தில் இருந்து வரி விதிக்க முடியாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, சோபித ராஜகருண, மேனகா விஜேசுந்தர, டி.என்.சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகிய ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  இந்த மனுக்கள் ஆராய்யப்பட்டன.

அதில், சோபித ராஜகருண, மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகிய  நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையான நீதிபதிகள், உரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்குவது நியாயமற்றது எனவும் தார்மீகமானது இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

வரி தொடர்பான தீர்மானங்கள் அரசியலமைப்பு சபை மற்றும் நிறைவேற்று விடயம் என்பதால், அதில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று பெரும்பான்மையான நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நீதிபதிகளின் சம்பளம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி | Tamil Leader | We Lead the Nation