Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மீண்டும் வரி அதிகரிப்பு?

T

The Leader Desk

அக்டோபர் 31, 2023 • 3:20 PM

மீண்டும் வரி அதிகரிப்பு?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வருமானத்தை பெற வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
  • இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • இதேவேளை, 2022ஆம் ஆண்டு திறைசேரிக்கு கிடைத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாகும்.
  • இதில் 2022ஆம் ஆண்டு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக மாத்திரம் 956 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வருமானத்தை பெற வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச சொத்துக்களை விற்பது, வரிகளை மேலும் அதிகரிப்பது, புதிய வரிகளை விதிப்பது ஊடாக மாத்திரமே திறைசேரிக்கு கூடுதல் வருமானத்தை பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஏதாவது ஒரு வகையில் சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டு திறைசேரிக்கு கிடைத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாகும்.

இதில் 2022ஆம் ஆண்டு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக மாத்திரம் 956 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

ஓய்வூதியத்திற்காக 309 பில்லியனும், சமூர்த்தி உள்ளிட்ட மானியங்களுக்காக 506 பில்லியனும் செலவிடப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

இதன்படி, அரச வரி வருமானத்தில் இருந்து இந்த செலவுகளை மட்டுமே செலுத்த முடிந்துள்ளதாக  அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கின்றார்.

வரலாற்றில் இந்த நிலைமையை கடன் பெற்றும், மற்றும் பணம் அச்சடித்தும் தீர்த்து வைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

இதேவேளை, நாடு முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ள மற்றும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள சுமார் 30 பாலங்களை அடையாளம்  காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...