Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

உணவுப் பற்றாக்குறை குறித்து வீணாக அச்சம் கொள்ள வேண்டாம்

T

The Leader Desk

அக்டோபர் 31, 2023 • 3:19 PM

உணவுப் பற்றாக்குறை குறித்து வீணாக அச்சம் கொள்ள வேண்டாம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நாட்டிற்கு தேவையான 40% பால் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
  • ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (31) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.
  • கடந்த காலத்தில், 40 வீதமான திரவ பால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
  • மேலும், மேய்ச்சல் தரைகளை மேம்படுத்தவும் ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் தெரிவித்தார்.

இந்த நாட்டிற்கு தேவையான 40% பால் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  இன்று (31)  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர்  ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.
    
இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் மேலும் தெரிவிக்கையில், 

அரசாங்கம் என்ற வகையில், உணவு உற்பத்தி செயல்முறையை நெருக்கடியின்றி பராமரிக்க தேவையான பங்களிப்பை வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்பட்டது.  விவசாய அமைச்சரினதும் விவசாயிகளினதும் ஒத்துழைப்போடு   அரிசியில் தன்னிறைவை எட்டி மேலதிக அரிசி உற்பத்தியைப் பேண முடிந்துள்ளது.  எனவே, எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம்  கொள்ளத் தேவையில்லை.

கால்நடை அமைச்சும் மக்களுக்கு தேவையான அளவு புரதத்தை வழங்கக்கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில், 40 வீதமான   திரவ பால்  மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையைக் கருத்தில் கொண்டு திரவப் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

மேலும், மேய்ச்சல் தரைகளை மேம்படுத்தவும்   ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்கவும்,  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான உணவை தட்டுப்பாடின்றி வழங்குவதன் மூலம் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தேசிய பால் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பால்மாவில் தங்கியிருக்கும் நிலையை மாற்றி அதற்குப் பதிலாக மாற்று முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில்  திரவ பாலை ஊக்குவிக்க வேண்டும். திரவப் பாலை மக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், நடமாடும் விற்பனை நிலையங்களைப் பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திரவ பாலை பொதி  செய்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது கால்நடை தீவனம் இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மூடப்பட்ட கால்நடை உற்பத்தியை மீண்டும் தொடங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” எனவும்  இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் தெரிவித்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...