Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பாதாள உலகச் செயற்பாடுகளை ஒழிக்க புதிய திட்டம்

T

The Leader Desk

அக்டோபர் 30, 2023 • 3:26 AM

பாதாள உலகச் செயற்பாடுகளை ஒழிக்க புதிய திட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொண்டுவருவதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
  • கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கைதி ஒருவர் தெரிவித்தது போன்று மீண்டும் கொழும்பில் தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என விசாரணையில் ஏற்கனவே தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இந்த பாதாள உலகக் குற்றச் செயல்கள் குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது.
  • இந்த ஆயுதக் குழுக்களையும் இந்த பாதாள உலக செயற்பாடுகளையும் எதிர்வரும் 06 மாதங்களில் முற்றாக நிறுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எழுத்து அளவு:

கொண்டுவருவதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கைதி ஒருவர் தெரிவித்தது போன்று மீண்டும் கொழும்பில் தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என விசாரணையில் ஏற்கனவே தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த, “அண்மையில் அனுராதபுரத்தில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது, ​​பேருந்தில் இருந்து ஒரு சிறிய காகித துண்டு வீசப்பட்டது. மீண்டும் கொழும்பைத் தாக்க நாங்கள் தயார் என்று அதில் கூறப்பட்டிருந்தது. அவர் தன் மீதான கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு செய்துள்ளார். அதில் உண்மை இல்லை என தெரியவந்தது.

இந்த பாதாள உலகக் குற்றச் செயல்கள் குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது. குறிப்பாக தென் மாகாணத்திலும், மேல் மாகாணத்தில் சில இடங்களிலும் ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர். இல்லாவிட்டால் துப்பாக்கி ஏந்தியவர்கள் சுட்டுக் கொன்று கொல்கின்றனர். இவை அனைத்தும் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளால் வழிநடத்தப்படுகின்றன.

இந்த ஆயுதக் குழுக்களையும் இந்த பாதாள உலக செயற்பாடுகளையும் எதிர்வரும் 06 மாதங்களில் முற்றாக நிறுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பவர்களும் உள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால், காவல்துறைக்கு அறிவித்து உதவங்கள்" என்றார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...