Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சீகிரியாவில் துருக்கி பெண்ணின் பணப்பை கொள்ளை!

T

The Leader Desk

அக்டோபர் 27, 2023 • 11:56 PM

சீகிரியாவில் துருக்கி பெண்ணின் பணப்பை கொள்ளை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பணப்பையை திருடிய சந்தேகநபர்கள் இருவரை சீகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
  • மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களின் உதவி காரணமாக குறித்த சந்தேகநபர்களை விரைவாக கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • நேற்று (26) காலை, சீகிரியாவுக்குச் சென்று மீண்டும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த 22 வயதான துருக்கிய வெளிநாட்டு பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கிவிட்டு, அவரது பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
  • பின்னர், சிறிது நேரத்திற்கு முன், இரண்டு சந்தேக நபர்கள் வெளிநாட்டு யுவதியின் பணப்பையை கொள்ளையடித்துவிட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
எழுத்து அளவு:

பணப்பையை திருடிய சந்தேகநபர்கள் இருவரை சீகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  13 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களின் உதவி காரணமாக குறித்த சந்தேகநபர்களை விரைவாக கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (26) காலை, சீகிரியாவுக்குச் சென்று மீண்டும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த 22 வயதான துருக்கிய வெளிநாட்டு பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கிவிட்டு, அவரது பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதிவேகமாக பயணித்த இந்த மோட்டார் சைக்கிள்களை வீதியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் பார்த்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் தொடர்பில் சந்தேகம் அடைந்த சிறுவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளின் எண்ணை மனதில் வைத்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.

பின்னர், சிறிது நேரத்திற்கு முன், இரண்டு சந்தேக நபர்கள் வெளிநாட்டு யுவதியின் பணப்பையை கொள்ளையடித்துவிட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பெண் தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அந்த எண்ணை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களின்  சாமர்த்தியமான செயற்பாட்டால் சந்தேகநபர்கள் இலகுவாகவும் விரைவாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு யுவதியின் பணப்பையில் 225 அமெரிக்க டொலர்களும் 20,000 இலங்கை ரூபாவும் இருந்துள்ளன.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சீகிரியாவில் துருக்கி பெண்ணின் பணப்பை கொள்ளை! | Tamil Leader | We Lead the Nation