Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வன்புணர்வுக்கு ஆளானதாக கூறப்படும் இளம் பெண் தொடர்பில் வௌியான தகவல்

T

The Leader Desk

அக்டோபர் 27, 2023 • 8:29 AM

வன்புணர்வுக்கு ஆளானதாக கூறப்படும் இளம் பெண் தொடர்பில் வௌியான தகவல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உட்படுத்தப்படுத்தியதாக 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
  • பூகொடை - பெபிலி​வல, அம்பகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே பூகடை பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
  • சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 வயதுடைய மற்றுமொரு இளைஞர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகநபர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபர்கள் பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

உட்படுத்தப்படுத்தியதாக 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவர்,   பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பூகொடை - பெபிலி​வல, அம்பகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே பூகடை பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

கணவன் வேலைக்குச் சென்றபோது வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பாலூட்டிக்கொண்டிருந்த தனது குழந்தையை பறித்து தரையில் அடித்து கொலை செய்வோம் என மிரட்டி  தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 வயதுடைய மற்றுமொரு இளைஞர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகநபர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபர்கள் பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...