Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

குடும்ப பெண் அடித்து கொலை - கணவன் விளக்கமறியலில்

T

The Leader Desk

அக்டோபர் 26, 2023 • 2:34 PM

குடும்ப பெண் அடித்து கொலை - கணவன் விளக்கமறியலில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
  • முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணான 23 வயதான ஞானசீலன் கீதாஞ்சலியினை அவரது கணவர் கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் (24)உடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
  • இந்த சம்பவத்தினை செய்த கணவன் கொழும்பு பகுதியில் வைத்து 24 ஆம் திகதி முள்ளியவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புதைக்கப்பட்ட குடும்ப பெண்ணின் உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
  • சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கு இடையில் குடும்ப பிரச்சினை அவ்வப்போது இடம்பெற்று வந்துள்ள நிலையில் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
எழுத்து அளவு:

செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணான 23 வயதான ஞானசீலன் கீதாஞ்சலியினை அவரது கணவர் கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம்  (24)உடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21ஆம் திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில்,  23ஆம் திகதிமகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த பெண்ணின் தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில்  மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தினை செய்த கணவன் கொழும்பு பகுதியில் வைத்து  24 ஆம் திகதி  முள்ளியவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புதைக்கப்பட்ட குடும்ப பெண்ணின் உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனையில் பெண்ணின் கழுத்தில் பலமாக அடிவிழுந்த காரணத்தினால் பெண் அவர் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கு இடையில் குடும்ப பிரச்சினை அவ்வப்போது இடம்பெற்று வந்துள்ள நிலையில் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

இதன்போது கணவன் மனைவியின் கழுத்தில் தாக்கியதில் மனைவி நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் உடலத்தினை யாருக்கும் தெரியாமல் மலசலகூடத்திற்கு அருகில் உள்ள குழியில் போட்டு மூடிவிட்டுள்ளதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடலம் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கணவன் நேற்று (25)முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...