Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தாயை பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டால் மகன் தற்கொலை

T

The Leader Desk

அக்டோபர் 26, 2023 • 2:33 PM

தாயை பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டால் மகன் தற்கொலை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிட்டபெத்தர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
  • உயிரிழந்த பந்துசேனவின் தாயார் 90 வயதுடைய ஆவார்.
  • இந்த சம்பவம் குறித்து அறிந்த அடுத்த நாளே தாயும் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

பிட்டபெத்தர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அடுத்த நாளே தாயும் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

59 வயதான உவரகல ஜதுங்கே பந்துசேன என்ற ஒரு பிள்ளையின் தந்தையே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் மாத்தறை பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவின் கொஸ்மில்கொட பகுதியில் வசித்து வந்தார்.

இவர் கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இறந்தவரின் மனைவி, கூறிய போது,

"பிரதேச செயலர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து மக்கள் முன்னிலையில் அவரை திட்டியுள்ளனர். அவர் வீட்டுக்கு வந்து திட்டியதாகச் கூறினார். இதனால் மன உளைச்சலுடனே காணப்பட்டார் என்றார்.

உயிரிழந்த பந்துசேனவின் தாயார் 90 வயதுடைய  ஆவார்.

இவர் தனது வீட்டில் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

ஆனால், தனது மகள் அதாவது பந்துசேனவின் சகோதரி தாயை சித்திரவதை செய்துள்ளதால் , அவர் தாயை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொண்டார்.

‘‘கண்களால் பார்த்தோம்... மகன் தன் தாயை நன்றாக கவனித்தார்’’ என கிராம மக்கள் தெரிவித்தனர்.

எனினும், தனது தாயை பந்துசேன என்ற சகோதரன் கவனிப்பதில்லை என அவரது சகோதரி கிராம அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து சோகமடைந்த பந்துசேன தனது மனைவியிடம் இதனைத் தெரிவித்திருந்தார்.

சம்பவத்தன்று பிற்பகல் முதல் பந்துசேன வீட்டில் இல்லாததால், உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன், அவரது மருமகனும் இது தொடர்பில் முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால், மறுநாள் காலை அவரது உடல் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

மகனின் மரணத்தை அறிந்த தாய் மொரவக மாவட்ட வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...