Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை

T

The Leader Desk

அக்டோபர் 26, 2023 • 2:32 PM

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி - 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
  • கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
  • அதன் பின்னர் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடினர். இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணைக்கு சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
எழுத்து அளவு:

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி - 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. 

குறித்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை கடந்து சென்றுள்ளார்.

சற்று நேரத்தில் சத்தம் கேட்டது. அதன் பின்னர் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடினர். 

இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணைக்கு சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

அவர் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மரணம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...