Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவடையும்

T

The Leader Desk

அக்டோபர் 23, 2023 • 2:36 PM

மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவடையும்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
  • இடம்பெயர்ந்த 274,120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 917,143 பேர் அந்த மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
  • இதன்படி 1,701 குடும்பங்களைச் சேர்ந்த 4,999 பேரே மீள்குடியேற்றப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
  • மன்னார், எருக்கலம்பிட்டி "குவைத் ஸகாத்" (Kuwait Zakath) வீடமைப்புக் கிராமம் - இரண்டாம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று (22) கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த 274,120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 917,143 பேர் அந்த மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி 1,701 குடும்பங்களைச் சேர்ந்த 4,999 பேரே மீள்குடியேற்றப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மன்னார், எருக்கலம்பிட்டி "குவைத் ஸகாத்" (Kuwait Zakath) வீடமைப்புக் கிராமம் - இரண்டாம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று (22) கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

125 வீடுகளைக் கொண்ட இந்த வீடமைப்புக் கிராமம் "குவைத் ஸகாத் ஹவுஸ்" நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு 18 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

முதற்கட்டமாக 75 வீடுகள் முன்பு திறக்கப்பட்டன. அதற்காக செலவிடப்பட்ட தொகை 105 மில்லியன் ரூபா ஆகும்.

முப்பது வருடகால விடுதலைப் புலிகளின் யுத்தத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீட்டுத் தேவை 20,276 ஆகும்.

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த 3828 குடும்பங்களைச் சேர்ந்த 9,683 பேர் தற்போது தாய்நாடு திரும்பியுள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அந்த குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

மோதல் சூழ்நிலையினால் இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்கமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், இலங்கைக்கான பிரதி குவைத் தூதுவர் பத்ர் அல்னோ வைம், குவைத் ஸகாத் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மஜீத் எஸ்.எம்.எஸ். அலசெமி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி, மன்னார் மாவட்ட முகாமையாளர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...