Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கடற்கொள்ளையர்களுக்கு இலங்கை அரசு உதவிகளையும் வழங்கிறது

T

The Leader Desk

அக்டோபர் 23, 2023 • 2:34 PM

கடற்கொள்ளையர்களுக்கு இலங்கை அரசு உதவிகளையும் வழங்கிறது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
  • ஆளும் கட்சியை சேர்ந்த பெரும் புள்ளிகள் கனிமள கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன.
  • சிவகாசியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “விருதுநகர் மாவட்டம் வறட்சியான பகுதியாகும்.
எழுத்து அளவு:

போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,


“விருதுநகர் மாவட்டம் வறட்சியான பகுதியாகும். வேளாண்மை சார்ந்த தொழில்கள் இங்கு இல்லை. தாமிரபரணி மற்றும் காவிரி ஆற்றின் உபரி நீரை குன்டாற்றில் இணைக்கின்ற திட்டத்தை இந்திய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளுக்கு அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு சரியான முறையில் ஆய்வு நடத்தாததே காரணம். பட்டாசு தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்.

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இலங்கையின் இந்திய கடல் எல்லையில் கடல் கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் கடல் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி வருகிறார்கள்.

இலங்கை அரசு மறைமுகமாக கடல் கொள்ளையர்களை உருவாக்கி உள்ளது.

கடல் கொள்ளையர்களுக்கு இலங்கை அரசு அனைத்து உதவியும் வழங்கி வருகிறது. தமிழக அரசும், இந்திய மத்திய அரசும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பசுமையான கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த பெரும் புள்ளிகள் கனிமள கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன.

தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து அதற்குரிய விசாரணை நடத்ததவில்லை என்றால் எனது தலைமையில் பாமக சார்பாக போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் சொல்வது தவறான கருத்து. பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சமூக நீதி பேசும் திமுக தலைமையிலான தமிழக அரசு ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்ட வேண்டும்? நிதி ஒதுக்கீடு செய்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஜாதி வாரிய கணக்கெடுப்பு இந்திய மத்திய அரசு செய்ய வேண்டும் என தமிழக அரசு தட்டிக்ககழிக்க கூடாது. திமுக தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி செய்வோம் என கூறி இருக்கலாம், ரத்து செய்வோம் என உறுதி அளித்திருக்க கூடாது.

நீட் தேர்வை ரத்து செய்யும் மன நிலையில் இந்திய மத்திய அரசு இல்லை. பாராளுமன்ற தேர்தலின் பாமக நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தமிழக ஆளுனரும், தமிழக அரசும் எதிரும் புதிருமாக செயல்பட கூடாது. அரசு செய்யும் தவறுகளை எடுத்து சொல்ல ஆளுனருக்கு உரிமை உள்ளது. வேண்டுமென்றே அரசை எதிர்க்க கூடாது” என தெரிவித்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கடற்கொள்ளையர்களுக்கு இலங்கை அரசு உதவிகளையும் வழங்கிறது | Tamil Leader | We Lead the Nation