Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கற்பிட்டியில் வர்த்தக பெண் கடத்தல்

T

The Leader Desk

அக்டோபர் 23, 2023 • 2:33 PM

கற்பிட்டியில் வர்த்தக பெண் கடத்தல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்துடன், குறித்த பெண்ணைக் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசுக் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
  • இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் ஒருவர் இன்று (23) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.
  • இந்த நிலையில் குறித்த காரை ஆனமடுவ பொலிஸார் மீட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணைக் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசுக் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் ஒருவர் இன்று (23) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.

காரில் வந்த குழு ஒன்றினாலேயே இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று அதிகாலை குறித்த பெண் கடத்தப்பட்ட காரை ஆனமடுவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கார் பாலாவி ஊடாக ஆனமடுவை நோக்கி பயணிப்பதாக கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த காரை தடுத்து நிறுத்துமாறு கற்பிட்டி பொலிஸார் சுற்றியுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காரை ஆனமடுவ பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது,   காரில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டிய சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை, ஆனமடுவ, வதத்த பிரதேசத்தில் குறித்த காரின் வேகம் குறைந்த போது  கடத்தப்பட்டதாக கூறப்படும் கற்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகப் பெண் காரில் இருந்து குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காரில் இருந்து தப்பிய குறித்த பெண் மறைந்திருந்த நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடித்து அவர் ஆனமடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், கைது செய்யப்பட்ட நபரையும், பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்ணையும் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...