Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பொலிஸாருடன் முறுகல் - கைதான பெண் விளக்கமறியலில்

T

The Leader Desk

அக்டோபர் 22, 2023 • 2:58 AM

பொலிஸாருடன் முறுகல் - கைதான பெண் விளக்கமறியலில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்போது அங்கு பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
  • பின்னர், குறித்த பெண்ணும் குறித்த இரு இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
  • இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், "19ஆம் திகதி நள்ளிரவில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் இரண்டு பேரை கைது செய்தது.
  • கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகும்.
எழுத்து அளவு:

செய்திருந்தனர்.

இதன்போது அங்கு பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பின்னர், குறித்த பெண்ணும் குறித்த இரு இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

"19ஆம் திகதி நள்ளிரவில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் இரண்டு பேரை கைது செய்தது. அவர்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தினார்கள் என பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்."

"இருவரும் மதுபோதையில் இருந்ததால், பொலிஸ் அதிகாரிகளால் சம்பவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகும்.

கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல்நிலையத்துக்கு வந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரிகளை மிக மோசமான வார்த்தைகளாலும், கடுமையான வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.

எனினும் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோதும், அவர் செல்லவில்லை.

"இதையடுத்து, குறித்த பெண்ணை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட பின்னரும், இந்த பெண் பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு அவர்களை துன்புறுத்தியுள்ளார், கடித்துள்ளார்."

"ஒருவாறு பெண்ணைக் கட்டுப்படுத்தி, அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது." என்றார்.

சம்பவம் தொடர்பான காணொளி இங்கே..

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...