Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தலைமன்னாரில் பெருந்தொகை போதைப் பொருட்கள் மீட்பு

T

The Leader Desk

அக்டோபர் 17, 2023 • 3:29 AM

தலைமன்னாரில் பெருந்தொகை போதைப் பொருட்கள் மீட்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடவடிக்கையின் மூலம் 04 கிலோவுக்கும் அதிகமான Crystal Methamphetamine (ICE), சுமார் 01 கிலோ ஹெரோயின் மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹஷிஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
  • கடற்படையினர் நேற்று (16) அதிகாலை தலைமன்னார் கிராம பகுதி கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதோடு கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனை செய்தனர்.
  • இதன் போது சுமார் 04 கிலோ மற்றும் 194 கிராம் எடையுள்ள கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் நான்கு பொதிகளும், 01 கிலோ மற்றும் 034 கிராம் எடையுள்ள ஹெரோயின் பொதியொன்று, சுமார் 05 கிலோ மற்றும் 254 கிராம் எடையுள்ள ஹாஷிஸ் 5 பொதிகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
  • இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 94 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

நடவடிக்கையின் மூலம் 04 கிலோவுக்கும் அதிகமான Crystal Methamphetamine (ICE), சுமார் 01 கிலோ ஹெரோயின் மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹஷிஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

 கடற்படையினர் நேற்று (16) அதிகாலை தலைமன்னார் கிராம பகுதி கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதோடு  கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனை செய்தனர்.

இதன் போது சுமார் 04 கிலோ மற்றும் 194 கிராம் எடையுள்ள கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன்  நான்கு பொதிகளும், 01 கிலோ மற்றும் 034 கிராம் எடையுள்ள ஹெரோயின் பொதியொன்று, சுமார் 05 கிலோ மற்றும் 254 கிராம் எடையுள்ள  ஹாஷிஸ் 5 பொதிகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 94 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.

கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் படகு  என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...