Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பொலிஸாருடன் மோதிய கொலையாளி உயிரிழப்பு

T

The Leader Desk

அக்டோபர் 15, 2023 • 6:26 AM

பொலிஸாருடன் மோதிய கொலையாளி உயிரிழப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மோட்டார் சைக்களில் பிரவேசித்து T56 துப்பாக்கியால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
  • இந்நிலையில் மூன்று நாட்களாக தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் இன்று (15) அதிகாலை அவிசாவளை பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.
  • அங்கு சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனது கைகளில் இருந்த கைவிலங்கைப் பயன்படுத்தி கொல்ல முயற்சித்துள்ளார்.
எழுத்து அளவு:

உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்களில் பிரவேசித்து T56 துப்பாக்கியால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் அவிசாவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மூன்று நாட்களாக தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் இன்று (15) அதிகாலை அவிசாவளை பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.

சந்தேக நபரை பொலிசார், அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணியம்கம ஏத்பந்திய வீதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனது கைகளில் இருந்த கைவிலங்கைப் பயன்படுத்தி கொல்ல முயற்சித்துள்ளார்.

பின்னர், பொலிஸார் அதை தடுக்க முயன்றனர், இதில் சந்தேக நபர் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த சந்தேக நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்தே காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...