Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்

T

The Leader Desk

அக்டோபர் 14, 2023 • 5:20 AM

பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று 11 ஆம் திகதி கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.
  • மனித உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பது, அவசரகாலச் சூழ்நிலைகளின் போது மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றிப் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதன் போது பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.
  • புறநகர் பகுதிகளில் மிகவும் பொருத்தமான மற்றும் தரமான மரங்கள் நடப்படுவதை உறுதி செய்யும் முறையான அமைப்பை தயார் செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
எழுத்து அளவு:

நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று 11 ஆம் திகதி கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.

மனித உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பது, அவசரகாலச் சூழ்நிலைகளின் போது மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றிப் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதன் போது பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.

புறநகர் பகுதிகளில் மிகவும் பொருத்தமான மற்றும் தரமான மரங்கள் நடப்படுவதை உறுதி செய்யும் முறையான அமைப்பை தயார் செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

குறுகிய கால தீர்வாக, விசேடமாக கொழும்பு மாநகரசபையின் அதிகார வரம்பில் எதிர்கால வேலைத்திட்டங்களை முறையான ஆய்வின் பின்னர் நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர், இதற்காக சிவில் பாதுகாப்புப் படையின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப உதவியைப் பெறவும், புறநகர்ப் பகுதிகளில் விழும் அபாயத்தில் உள்ள மரங்களை அடையாளம் காண சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுமாரும் அமைச்சர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையம், உள்ளுராட்சி அமைச்சு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், தேசிய தாவரவியல் பூங்கா, வனவியல் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...