Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல்

T

The Leader Desk

அக்டோபர் 11, 2023 • 3:33 PM

இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நிகழ்த்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது.
  • ஆழ்ந்த தீக்காயங்களுடன் மனிதர்களை நடைபிணமாக முடக்கக்கூடியவை.
  • இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது.
எழுத்து அளவு:



இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நிகழ்த்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது.

இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது.

மேலும், தடைசெய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பலஸ்தீனிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன

காஸா பிராந்தியத்தில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தொடுப்பதாகவே இஸ்ரேல் அறிவித்தது.

எனினும் வடக்கு காஸா உட்பட மக்கள் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குவதாக பலஸ்தீனியர்களின் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

வெண் பாஸ்பரஸ் குண்டுகள் என்பவை பெரும் நெருப்புக் கோளமாக வெடிப்பவை. சுமார் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும், நெருப்பையும் உமிழ்பவை.

ஆழ்ந்த தீக்காயங்களுடன் மனிதர்களை நடைபிணமாக முடக்கக்கூடியவை. இவற்றை போரில் பயன்படுத்த சர்வதேச நாடுகள் மத்தியில் தடை விதிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில், தடையை மீறி வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவது போர்க்குற்றமாக கருதப்படும்.

இதற்கு முன்னதாகவும் லெபனான் உள்ளிட்ட நாடுகளின் மீது வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியதான முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினம் அதன்போது மறுப்பு தெரிவித்த இஸ்ரேல், சர்வதேச அழுத்தம் காரணமாக பின்னர் அவற்றை ஒப்புக்கொண்டது.

அதேபோன்று இப்போதும் இஸ்ரேல் வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துமெனில், போர் குற்றம் உள்ளிட்ட கூடுதல் பிரச்சினைகளுக்கும் உள்ளாகக் கூடும் என கூறப்படுகிறது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...