Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பிரபல நடிகர் ஜக்சன் அந்தனி காலமானார்

T

The Leader Desk

அக்டோபர் 9, 2023 • 5:03 AM

பிரபல நடிகர் ஜக்சன் அந்தனி காலமானார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (09) அதிகாலை காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
  • ஜெக்சன் அண்டனி ஜூலை 8, 1958 இல் ராகமவில் பிறந்தா.
  • இறக்கும் போது அவருக்கு வயது 65.
  • சுமார் 14 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் அண்டனி இன்று அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:



வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (09) அதிகாலை காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜெக்சன் அண்டனி ஜூலை 8, 1958 இல் ராகமவில் பிறந்தா. இறக்கும் போது அவருக்கு வயது 65.

நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பிற்காக அனுராதபுரம் சென்றிருந்த நிலையில், மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த கெப் வண்டி யானை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த ஜெக்சன் அண்டனி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 14 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் அண்டனி இன்று அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

நடிகர், பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர், அறிவிப்பாளர் என தனது திறமையை வெளிப்படுத்திய அவர் இந்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகக் கருதப்படுகிறார்.

நாட்டின் கலாச்சாரத்தை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சென்ற அவர், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல விருதுகளை ஜெக்சன் அண்டனி, தனது அனுபவத்தை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல மிகப்பெரிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெக்சன் அண்டனியின் மறைவு இந்நாட்டின் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...