Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

காஸாவில் இலங்கையர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு - மேலும் ஒருவர் மாயம்

T

The Leader Desk

அக்டோபர் 9, 2023 • 5:02 AM

காஸாவில் இலங்கையர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு - மேலும் ஒருவர் மாயம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
  • இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
  • வயிற்றிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் தகவல் கிடைக்காவிட்டால் 1989 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா நகரங்களை மையமாக கொண்டு வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நிமல் பண்டார,

“தென் பிராந்தியத்தில் இருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் ஊழியர். வயிற்றிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை. மற்றுமொரு இலங்கை இளைஞரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தொடர்பில் அறிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் தூதரகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் 0094 - 716640560 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாக தகவல்களை அனுப்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி இணை முகாமையாளர் (பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு) காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் தகவல் கிடைக்காவிட்டால் 1989 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...